உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாளை மும்பையில் நடைபெறும் இந்தி தின நிகழ்ச்சியிலும், அலுவல் மொழி மாநாட்டிலும் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 13 SEP 2026 2:48PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா நாளை, (2026 செப்டம்பர் 14) மும்பையில் நடைபெறும் இந்தி தின விழா- 2026, 6வது அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டின் தொடக்க அமர்வு ஆகியவற்றில் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதலமைச்சர், இரு துணை முதலமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். மகாராஷ்டிராவின் வளமான மொழி, கலாச்சார, இலக்கிய மரபுகளுடன் இந்தி மொழிக்கு உள்ள உயிரோட்டமான உறவை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டும்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்வேகத்தாலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறை, 2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அலுவல் மொழி மாநாடுகளை நடத்தி வருகிறது. வாரணாசியில் தொடங்கிய இந்தப் பயணம், சூரத், புனே, புதுதில்லி, காந்திநகர் ஆகிய இடங்களில் நடைபெற்று, இந்த ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பையில் நடைபெறுகிறது.

இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்க அமர்வின் போது, 2025–26-ம் ஆண்டுக்கான 'ராஜ்பாஷா கௌரவ்', 'ராஜ்பாஷா கீர்த்தி' விருதுகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழங்குவார். அலுவல் மொழித் துறையில் சிறப்பான பணிகளை மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்த நிறுவனங்களும் தனிநபர்களும் இந்த விருதுகள் மூலம் கௌரவிக்கப்படுவார்கள்.

தொடக்க அமர்வு, பிற அமர்வுகளின் போது பல முக்கியமான புத்தகங்களும் வெளியீடுகளும் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு மாநாட்டின் ஒரு சிறப்பு அம்சம், 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலை மையமாகக் கொண்ட ஒரு சிறப்பு கலந்துரையாடல் அமர்வு ஆகும்.

செப்டம்பர் 15 ஆம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெறும் சிறப்பு அமர்வில், புகழ்பெற்ற பாடலாசிரியரும் எழுத்தாளருமான திரு மனோஜ் முண்டாஷிர் கலந்துகொள்கிறார்.

தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆறாவது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு, இந்தியுடன் சேர்த்து அனைத்து இந்திய மொழிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு, உரையாடல் ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309713&reg=48&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2309798) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Malayalam