குடியரசுத் தலைவர் செயலகம்
ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 SEP 2026 8:50PM by PIB Chennai
ஐந்தாவது இளவரசர் ரஹீம் ஆகா கான் இன்று (செப்டம்பர் 10, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.
ஆகா கான் இந்தப் பொறுப்பை ஏற்ற பிறகு இந்தியாவுக்கு அவர் மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தை வரவேற்ற குடியரசுத் தலைவர், அவரது தந்தையான மறைந்த நான்காம் ஆகா கானின் மறைவுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்தார். இந்தியாவில், நான்காம் ஆகா கானையும், ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பு மேற்கொண்ட பணிகளையும் மிகுந்த மரியாதையுடன் மதிக்கிறோம் என்று அவர் கூறினார்.
நீர், சுகாதாரம், கல்வி, நகர்ப்புற மறுசீரமைப்பு, பெண்கள் மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளில் ஆகா கான் மேம்பாட்டு கட்டமைப்பால் இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைக் குடியரசுத் தலைவர் பாராட்டினார். இத்திட்டங்கள் பொது-தனியார் ஒத்துழைப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள் என்றும், அரசுடன் இணைந்து செயல்படும் லாப நோக்கற்ற அமைப்புகள் எவ்வாறு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்பதை இவை நிரூபிக்கின்றன என்றும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.
****
(Release ID: 2308921)
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2309104)
வருகையாளர் எண்ணிக்கை : 6