மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆதார் முக அங்கீகார மென்பொருள் மேம்பாட்டு கருவித்தொகுப்பு, ஆதார் முக அங்கீகாரப் பாதுகாப்பு மென்பொருள் தொகுப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியது

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 6:15PM by PIB Chennai

ஆதார் முக அங்கீகார மென்பொருள் மேம்பாட்டு கருவித்தொகுப்பு, ஆதார் முக அங்கீகாரப் பாதுகாப்பு மென்பொருள் தொகுப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியது.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற சர்வதேச நிதிசார் தொழில்நுட்ப விழாவில், சுற்றுச்சூழல் அமைப்பின் கூட்டு நிறுவனங்கள்  தங்களது  டிஜிட்டல் பயன்பாடுகளில், ஆதார் முக அங்கீகாரத்தை தடையின்றி ஒருங்கிணைக்கவும், சோதிக்கவும், செயல்படுத்தவும் உதவுகிறது.

ஆதார் முக அங்கீகார மென்பொருள் மேம்பாட்டுக்கு கருவித் தொகுப்பு, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் முக அங்கீகாரத் திறனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் தளங்களின் பயன்பாடுகளில் நேரடியாகக் கொண்டு வருகிறது. இது பயனர்கள், தங்களது  பயன்பாடுகளுக்கு இடையே மாற வேண்டிய தேவையை நீக்கி, எளிமையான, ஒற்றைப் பயன்பாட்டு அங்கீகார அனுபவத்தை வழங்குகிறது.

பயன்பாட்டிற்குத் தயாராக உள்ள இந்த மென்பொருள் மேம்பாட்டுக்கு கருவித் தொகுப்பு, சுற்றுச்சூழல் அமைப்பின் கூட்டு நிறுவனங்களின்   ஒருங்கிணைப்பை எளிதாக்குவதுடன், செயற்கை நுண்ணறிவு/எந்திரக் கற்றல் அடிப்படையிலான நேரடித்தன்மை, போலியானத் தரவுகளின்  தடுப்புத் திறன்களையும் உள்ளடக்கியுள்ளது. இது அங்கீகாரத் தரவின் பாதுகாப்பான கையாளுதல், குறியாக்கத்தை ஆதரிக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன்களில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுத் துறைகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள்பிற அமைப்புகள், முக அங்கீகார வசதி கொண்ட சேவைகளை மிகவும் திறமையாகச் செயல்படுத்த இந்த மென்பொருள் மேம்பாட்டுக் கருவித் தொகுப்பு பெரும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2308398&reg=3&lang=1       

***

TV/SV/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2308763) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu , Kannada