ஆயுஷ்
azadi ka amrit mahotsav

அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய, மக்களை மையமாகக் கொண்ட, தரமான ஆயுஷ் சேவைகளை உறுதி செய்ய வேண்டும் - மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2026 12:25PM by PIB Chennai

நாடு முழுவதும் எளிதில் கிடைக்கக்கூடியமக்களை மையமாகக் கொண்ட,  தரமான ஆயுஷ் சேவைகள் வழங்குவதை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  மாநிலங்கள்யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்  வலியுறுத்தியுள்ளார்.  

ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில்நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த தேசியப் பயிலரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ஆயுஷ் மருத்துவ முறைகளின் செயல்பாடுகளை விரிவுபடுத்தமத்தியமாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை திரு ஜாதவ் வலியுறுத்தினார்மக்களின் மாறிவரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏதுவாகஆயுஷ் சுகாதார சேவைகளின் தரம் உள்ளிட்ட  பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் திரு பிரதாப்ராவ் ஜாதவ் கேட்டுக்கொண்டார்.

பகிரப்பட்ட அனுபவங்கள்சிறந்த நடைமுறைகள்ஒருங்கிணைந்த  செயல்பாடுகள் மூலம்ஆயுஷ் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கமத்திய அரசு, 30-க்கும் அதிகமான மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள்பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த துறை சார்ந்த நிபுணர்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றனர்.

இந்தப் பயிலரங்கில்நித்தி ஆயோக்கின் உறுப்பினர் (சுகாதாரம்பேராசிரியர் (டாக்டர்எம் ஸ்ரீனிவாஸ்மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் திரு வைத்யா ராஜேஷ் கோடேச்சா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2308157&reg=3&lang=1

***

SS/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2308413) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Telugu , Kannada