நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முன்னணி நிறுவனங்களிடமிருந்து வரவேற்பு
இடுகை இடப்பட்ட நாள்:
08 SEP 2026 11:39AM by PIB Chennai
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீட்டிலான நிலக்கரி/பழுப்பு நிலக்கரி வாயுவாக்கலை ஊக்குவிக்கும் திட்டத்தின் முதல் கட்ட விண்ணப்பப் பதிவு நிறைவடைந்துள்ளது. நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதானி எண்டர்பிரைசஸ், என்.டி.பி.சி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்துள்ளன.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, தற்சார்பு மற்றும் தொழிற்துறை வளர்ச்சி உத்திகளில் நிலக்கரி வாயுவாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2026 மே 13 அன்று இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. நிலக்கரியை யூரியா, மெத்தனால், ஹைட்ரஜன் போன்ற உயர் மதிப்புப் பொருட்களாக மாற்றுவதையும், 2030-ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி வாயுவாக்க இலக்கை எட்டுவதையும் இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டில் சுமார் ரூ.2.77 லட்சம் கோடி அளவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட எல்.என்.ஜி, யூரியா, மெத்தனால் மற்றும் அம்மோனியா இறக்குமதியைக் கணிசமாகக் குறைப்பது இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும். மேலும், இத்திட்டம் ரூ.2.5 லட்சம் கோடி முதல் ரூ.3 லட்சம் கோடி வரையிலான முதலீடுகளை ஈர்ப்பதுடன், பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்ட விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு 2026 செப்டம்பர் 8 முதல் தொடங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307725®=3&lang=1
***
TV/SE/GS
(வெளியீட்டு அடையாள எண்: 2307847)
வருகையாளர் எண்ணிக்கை : 12