விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

300 வேளாண் அறிவியல் மையங்களை மேம்படுத்தும் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் - மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுஹான்

இடுகை இடப்பட்ட நாள்: 07 SEP 2026 3:00PM by PIB Chennai

மாநிலங்களின் பங்கேற்பை அதிகரிக்கச் செய்வதன் மூலம், வேளாண் அறிவியல் மையங்களை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று ஆய்வு செய்தார்.

புதுதில்லியில் அவரது தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், 2025-ம் ஆண்டு நடைபெற்ற 5-வது தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் வேளாண் அறிவியல் மையங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளைச் செயல்படுத்துவது குறித்தும், அவற்றை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மத்திய வேளாண்துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி, வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர் மங்கி லால் ஜாட், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முன்னுரிமை அளிக்கப்பட்ட 300 வேளாண் அறிவியல் மையங்களின்  உள்கட்டமைப்பு, செயல்பாட்டு வசதிகளை 2027 மார்ச் மாதத்திற்குள் மேம்படுத்துவது குறித்த செயல் திட்டம் தொடர்பான  விவாதங்கள் நடைபெற்றன. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இலக்கை அடைய ஏதுவாக, மாநில அரசுகளின் முனைப்புடன் கூடிய பங்கேற்பும், உரிய நேரத்தில் கிடைக்கும் உதவியும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். முன்னுரிமை அளிக்கப்பட்ட  வேளாண் அறிவியல் மையங்களை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி, நிறுவன ரீதியான ஆதரவைத் திரட்டுவதற்காக, வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் செயலாளர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு மாநிலங்கள் மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் மூலம், இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. மகாராஷ்டிரா, குஜராத், கோவா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது வேளாண் அறிவியல் மையங்களிலிருந்து விரிவான திட்ட அறிக்கைகளைப் பெற்றுள்ளன; அதேவேளையில், பிற மாநிலங்கள் தயாரிப்பு, செயலாக்கத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307402&reg=3&lang=1

***

TV/SV/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2307741) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Punjabi , Gujarati , Telugu , Kannada