குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் நாளை முதல் 9-ம் தேதி வரை அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேச மாநிலங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 SEP 2026 3:30PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், நாளை (2026 செப்டம்பர் 6) முதல் 9-ம் தேதி வரை அசாம், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நான்கு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, குடியரசு துணைத்தலைவர் வரலாற்று, சமூக, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைப் பார்வையிடுவதுடன், பல்வேறு கல்வி, கலாச்சார, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

நாளை (செப்டம்பர் 6), குடியரசு துணைத்தலைவர் அசாமின் குவஹாத்திக்குச் செல்கிறார். அங்கு, கன்யா மகாவித்யாலயா என்று முன்பு அழைக்கப்பட்ட கீதாநகர் கல்லூரியின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் அவர் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து, குவஹாத்தியில் உள்ள ஸ்ரீமந்த சங்கரதேவ சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.

செப்டம்பர் 7 அன்று, குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மையத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள், முக்கிய பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பிறகு மேகாலயாவின் ஷில்லாங்கிற்குச் செல்லும் அவர், அங்கு சோசோ தாம் அரங்கத்தில் நடைபெறும் பொது வரவேற்பு, கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

செப்டம்பர் 8 அன்று, மணிப்பூரின் இம்பாலுக்குச் செல்லும் அவர் மொய்ராங்கில் உள்ள ஐஎன்ஏ அருங்காட்சியகம், போர் நினைவிடம், இம்பாலில் உள்ள சைனிக் பள்ளி ஆகியவற்றைப் பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் அருணாச்சல பிரதேசத்தின் இடாநகருக்கு செல்லவுள்ளார்.

செப்டம்பர் 9 அன்று, அருணாச்சல பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வில் கலந்துகொண்டு, சட்டமன்ற கலைக்கூடம், அருங்காட்சியகம் ஆகியவற்றைக் குடியரசு துணைத்தலைவர் பார்வையிடவுள்ளார். மேலும் அவர் இடாநகரில் உள்ள நியேதர் நம்லோ, ஜவஹர்லால் நேரு மாநில அருங்காட்சியகம், செவித்திறன் அற்றோர், பார்வையற்றோருக்கான டோனி போலோ மிஷன் பள்ளி ஆகியவற்றையும் பார்வையிடவுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306929&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2306997) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati