பாதுகாப்பு அமைச்சகம்
பெல்ஜியம் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருதரப்புப் பேச்சு நடத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 12:49PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பெல்ஜியம் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு வர்த்தக அமைச்சர் திரு தியோ ஃபிராங்கனுடன் 2026 செப்டம்பர் 3 அன்று புதுதில்லியில் இருதரப்புப் பேச்சு நடத்தினார். அப்போது, பாதுகாப்பு, தொழில்துறைச் சார்ந்த ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும் இருதரப்பினரும் ஆய்வு செய்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த பேச்சுகள், உயர்நிலைக் குழு பயணங்கள், பயிற்சி, திறன்மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
பிராந்திய அமைதி, பாதுகாப்புக் குறித்த விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததுடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பின் அவசியத்தையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பரஸ்பர நம்பிக்கை, மதிப்பு ஆகிய பகிரப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்தியா – பெல்ஜியம் இடையேயான கூட்டாண்மை அமைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி - பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர் ஆகியோருக்கிடையே புதுதில்லியில் நடைபெறும் சந்திப்பின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306252®=3&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306493)
வருகையாளர் எண்ணிக்கை : 10