வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
நாடு முழுவதும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 1:56PM by PIB Chennai
உலக அளவில் இந்திய வர்த்தகத்தை விரிவுபடுத்தவும், மேம்படுத்தப்பட்ட சந்தை அணுகலின் பயன்கள் நாட்டில் உள்ள வணிகங்களை சென்றடைவதை உறுதி செய்யவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதற்கும் நாடு தழுவிய முயற்சித் தேவை என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை அறியச் செய்தல் என்ற தலைப்பிலான தேசிய பயிலரங்கில் அவர் உரையாற்றினார். இந்தியாவில் விரிவடைந்து வரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் கட்டமைப்பை நாடு முழுவதும் உள்ள வணிகங்களுக்கு அதிக ஏற்றுமதி வாய்ப்புகளாக மாற்ற ஒருங்கிணைந்த முயற்சித் தேவை என்று வலியுறுத்தினார்.
இம்முயற்சி நாடு முழுவதும் விரைவாகப் பரவி அனைத்து 780 மாவட்டங்களிலும் உள்ள சிறிய, பெரிய கடைநிலை நபர், மிகச்சிறிய வணிகர், வர்த்தகர், தொழில் முனைவோர், புத்தொழில் நிறுவனங்கள், மகளிர் தொழில் முனைவோர் என்று அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று திரு கோயல் தெரிவித்தார். பொதுவாக உள்நாட்டுப் பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவை குறிப்பிடத்தக்க சர்வதேச சக்தியாக மாற்றுவதற்கான பெரிய நோக்கத்தை அடைவதில் சிறிய, பெரிய பங்களிப்புகள் அனைத்தும் விலைமதிப்பற்றதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306277®=48&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2306486)
வருகையாளர் எண்ணிக்கை : 7