பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் தூதரகப் பணிகளில் அடுத்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தொலைநோக்குப் பார்வை குறித்த ஆவணத்தைப் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 SEP 2026 12:55PM by PIB Chennai
பாதுகாப்புத் தூதரகப் பணிகளில் அடுத்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய கூட்டாண்மைகளுக்கான தொலைநோக்குப் பார்வைக் குறித்த ஆவணத்தைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் 2026 செப்டம்பர் 3 அன்று வெளியிட்டார்.
இந்த ஆவணம் தேசியப் பாதுகாப்பு நோக்கங்களை உலகளாவிய ஒத்துழைப்புடன் இணைத்து நீண்டகால நிலைத்தன்மை, பரஸ்பர வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவும்.
இருதரப்பு, பலதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நட்பு நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதை மேம்படுத்துதல், உலகளாவிய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக நாட்டை திகழச் செய்வதற்கு மேக் இன் இந்தியா பாதுகாப்புத் தளங்களை உருவாக்குதல், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு அளிப்பவராக இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை இந்த உத்திசார்ந்த வரைவுத் திட்டத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முக்கிய அம்சங்களாகும். பாதுகாப்பு தூதரக நடவடிக்கை இந்திய வெளியுறவுக் கொள்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததால் இந்த ஆவணம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கான தெளிவான, செயல்படுத்தக்கூடிய தொலைநோக்குப் பார்வையை அளிக்கிறது. இதன் மூலம் மாறிவரும் உலகளாவிய சூழலில் இந்தியா அமைதி, நீடித்த தன்மை, விதிகள் அடிப்படையில் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2306256®=3&lang=1
***
SS/IR/GS/SU
(வெளியீட்டு அடையாள எண்: 2306416)
வருகையாளர் எண்ணிக்கை : 5