பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மஹாநாயக் உத்தம் குமாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2026 9:10AM by PIB Chennai

பிரபல நடிகர் மஹாநாயக் உத்தம் குமாரின் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். காலத்தால் அழியாத அவரது நடிப்புத் திறன் பல தலைமுறைகள் கடந்து தற்போதும் மக்களின் மனதில் நினைவு கூறப்படுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் மனதின் குரல் நிகழ்ச்சியில் அந்தத் தனித்துவமிக்க நடிகர் குறித்துத் தாம் பேசிய கருத்துகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:

“மஹாநாயக் உத்தம் குமார்….பிரபல நடிகரான அவர் காலத்தால் அழியாத நடிப்பு மூலம் பல தலைமுறைகள் கடந்து மக்களால் நினைவு கூறப்படுகிறார்.

அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி மரியாதை செலுத்துகிறேன்.

அண்மையில் ஞாயிற்றுக் கிழமையன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் போது அவர் குறித்து நான் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறேன்.”

***

(Release ID: 2306173)

SS/IR/GS/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2306342) வருகையாளர் எண்ணிக்கை : 11