ஜவுளித்துறை அமைச்சகம்
தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனப் பட்டமளிப்பு விழா - நாளை பங்கேற்கிறார் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2026 9:35AM by PIB Chennai
தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தின் (NIFT) தலைவரான குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, நாளை (2026 ஆகஸ்ட் 31) புதுதில்லியில் நடைபெறவுள்ள தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். இவ்விழாவில், நாடு முழுவதிலுமிருந்து என்ஐஎஃப்டி-யின் 18 வளாகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், முக்கியப் பிரமுகர்கள், மூத்த அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் பட்டம் பெறும் மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தப் பட்டமளிப்பு விழாவானது, தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம் பெறும் மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதோடு, அவர்கள் பயின்ற காலத்தில் வெளிப்படுத்திய கல்விச் சிறப்பு, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமையவுள்ளது. இவ்விழாவில், அனைத்து வளாகங்களிலும் உள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து, வளாக அளவிலான பட்டமளிப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. அதில் மாணவர்கள் முறைப்படி தங்களது பட்டங்களைப் பெற்று, கல்விப் பயணத்திலிருந்து தொழில்முறை உலகிற்குள் அடியெடுத்து வைக்கவுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304601®=3&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304677)
வருகையாளர் எண்ணிக்கை : 57
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam