நிதி அமைச்சகம்
ஆபரேஷன் வஜ்ரா 2.0 நடவடிக்கையின் கீழ், மனநல மருந்துகளைச் சட்டவிரோதமாகக் கடத்திய வழக்கில் 66.80 லட்சம் மாத்திரைகளை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பறிமுதல் செய்தது
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2026 5:40PM by PIB Chennai
மனநல மருந்துகள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் பகுதியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகரித்த துல்லியமான உளவுத் தகவலின் அடிப்படையில் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பஞ்சாப் - இமாச்சலப் பிரதேச வழித்தடத்தில் மனநல மருந்துகள் அதிக அளவில் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவது குறித்த ரகசியத் தகவலின் பேரில், ஆபரேஷன் வஜ்ரா 2.0 நடவடிக்கையின் கீழ், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் உள்ளூர் சிறப்புப் பணிக்குழுவினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 2026 ஆகஸ்ட் 27-28 அன்று சண்டிகர் - பட்டி வழித்தடத்தில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அதில் உரிய சட்டப்பூர்வ ஆவணங்கள் இன்றி கடத்திச் செல்லப்பட்ட 66,79,980 மனநல மாத்திரைகள் (அல்ப்ராசோலம், ட்ராமடால், நைட்ரஸெபாம், குளோனஸெபாம் உள்ளிட்டவை) பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304526®=3&lang=1
***
SS/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304575)
வருகையாளர் எண்ணிக்கை : 9