குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஆகஸ்ட் 29-31 வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் லட்சத்தீவுகளுக்கு குடியரசு துணைத்தலைவர் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2026 5:51PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், 2026 ஆகஸ்ட் 29 முதல் 31 வரை தமிழ்நாடு, கர்நாடகா, கேரளம் லட்சத்தீவு ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஆகஸ்ட் 29 அன்று, தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் தொழில்நுட்பக் கல்விக் கழக அறக்கட்டளையின் நிறுவன தின விழாவில் குடியரசு துணைத்தலைவர் கலந்துகொள்வார். அதன் பின், அன்றைய தினம் பெங்களூருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு விதான சௌதாவில் நடைபெறும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் திரு ராமகிருஷ்ணா ஹெக்டேவின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்.

ஆகஸ்ட் 30 அன்று, கேரளத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் குடியரசு துணைத்தலைவர் லியோ XIII மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் 'கேரள கௌமுதி'-ன் 115-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பார்.

அதன்பின்னர், அவர் பத்தனம்திட்டாவுக்குச் சென்று 2026-ம் ஆண்டிற்கான ஆரன்முளா நீர் திருவிழாவைத் தொடங்கி வைப்பார். பின்னர், திருவனந்தபுரம் செல்லும் திரு சி பி ராதாகிருஷ்ணன், ஓணம் பண்டிகையின் ஒரு பகுதியாக நடைபெறும் ஊர்வல நிகழ்வைத் தொடங்கி வைப்பார்.

ஆகஸ்ட் 31 அன்று, லட்சத்தீவின் அகத்திக்குச் செல்லும் குடியரசு துணைத்தலைவர், அங்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை ஏற்பாடு செய்துள்ள மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பார்.

 

மீண்டும் கேரளத்திற்குத் திரும்பும் திரு சி பி ராதாகிருஷ்ணன், கொச்சியில் உள்ள ராஜகிரி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டங்களிலும்,  தொழில்-கல்வித்துறையின் சங்கமம் 3.0 உச்சிமாநாட்டிலும் கலந்து கொள்வார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304323&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2304449) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada