பிரதமர் அலுவலகம்
நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு மன்னர் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 4:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, நார்வேயின் ஐந்தாம் ஹரால்டு மன்னரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் நார்வே நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது மன்னரைச் சந்தித்ததை நினைவு கூர்ந்துள்ள திரு நரேந்திர மோடி, நார்வே மக்கள் மீதும், அந்த தேசத்தின் மீதும் அவரது அன்பையும் ஆழ்ந்த சேவை மனப்பான்மையையும் குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"நார்வேயின் மாட்சிமை பொருந்திய ஐந்தாம் ஹரால்டு மன்னரின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான் நார்வே சென்றிருந்தபோது மன்னரைச் சந்தித்ததை நினைவுகூர்கிறேன். அவருடைய கனிவான பண்பும், தேசத்தின் மீதான ஆழ்ந்த சேவை மனப்பான்மையும் என்னை மிகவும் நெகிழச் செய்தன.
அரச குடும்பத்தினருக்கும் நார்வே மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்."
(Release ID : 2304251)
****
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2304423)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam