பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு அறிவிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
23 APR 2026 2:34PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சோக சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலைத் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்தார்.
இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்குவதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபுரில் நடந்த விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தம். துயரத்திற்குள்ளான குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி"
***
(Release ID: 2254826)
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304146)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam