பிரதமர் அலுவலகம்
குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
21 APR 2026 12:02PM by PIB Chennai
குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, அனைத்து குடிமைப் பணி ஊழியர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். நல்லாட்சி மற்றும் தேச கட்டமைப்பை நோக்கிய நமது உறுதியை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு தருணம் இது என்று திரு மோடி குறிப்பிட்டார். "அடிமட்டப் பணிகள் முதல் கொள்கை உருவாக்கம் வரை, குடிமைப் பணி அதிகாரிகளின் முயற்சிகள் எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கின்றன. நமது குடிமைப் பணி ஊழியர்கள், கடமையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்தி, சிறப்பாகவும், கருணை மற்றும் புதுமையுடனும் தொடர்ந்து பணியாற்றட்டும்," என்று திரு மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:
“குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் என் வாழ்த்துகள். நல்லாட்சி மற்றும் தேசக் கட்டுமானத்தை நோக்கிய நமது உறுதியை மேலும் வலுப்படுத்த இது ஒரு சிறந்த தருணமாகும். அடிமட்டப் பணிகள் முதல் கொள்கை உருவாக்கம் வரை, குடிமைப் பணி ஊழியர்களின் முயற்சிகள் எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கின்றன. நமது குடிமை பணி ஊழியர்கள், கடமையின் மிக உயர்ந்த தரத்தை நிலைநாட்டி, சிறப்பாகவும், கருணை மற்றும் புதுமையுடனும் தொடர்ந்து பணியாற்றட்டும்.”
****
(Release ID: 2254041)
TV/RB/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304083)
வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam