குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 25 AUG 2026 6:33PM by PIB Chennai

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: -

“ஓணம் பண்டிகையின் நன்னாளில், குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய அறுவடைக்காலத்தின் வருகையை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி செலுத்தும் ஒரு நிகழ்வாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நமது வளமான கலாச்சாரத்தையும் சகோதரத்துவ உணர்வையும் ஓணம் பண்டிகை கொண்டாடுகிறது. இது, வேற்றுமையில் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. படகுப் போட்டிகள், நாட்டுப்புற நடனங்கள், இசை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை இந்தத் திருவிழாவுடன் தொடர்புடைய முக்கிய மரபுகளாகும். இவை கேரளத்தின் கலாச்சாரத்தையும் மாண்புகளையும் பறைசாற்றுகின்றன.

இந்த மங்களகரமான பண்டிகை, அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், செழிப்பை வழங்கிடவும், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்கக் குடிமக்களை ஊக்குவிக்கவும் நான் பிரார்த்திக்கிறேன்.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2303217&reg=3&lang=1

****

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2303364) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada , Malayalam