பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
குழந்தைத் திருமணங்கள் குறித்து 1098-ல் புகாரளிக்க மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வலியுறுத்தல்
இடுகை இடப்பட்ட நாள்:
25 AUG 2026 1:00PM by PIB Chennai
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, குழந்தைத் திருமணம் நடப்பது குறித்து அறிந்தாலோ அல்லது அது நடப்பதாகச் சந்தேகித்தாலோ பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும், உடனடியாக 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணை அழைத்துப் புகார் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், குழந்தைத் திருமணம் என்பது வெறும் சமூகத் தீமை மட்டுமல்ல எனவும் அது குழந்தைகளின் உரிமைகள், கல்வி, சுகாதாரம், எதிர்காலம் ஆகியவற்றுக்கு ஒரு கடுமையான பின்னடைவாகும் என்றும் கூறியுள்ளார்.
நமது மகள்களின் கனவுகள், உரிமைகள், பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், குழந்தை திருமணமற்ற இந்தியா என்ற உறுதிப்பாட்டை நனவாக்கவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
----
(Release ID : 2303077)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2303297)
வருகையாளர் எண்ணிக்கை : 11