இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் பங்கேற்கும் நாடு தழுவிய கேலோ இந்தியா விளையாட்டுக் குறித்த கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 24 AUG 2026 4:07PM by PIB Chennai

தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கும் “கேலோ இந்தியா – பிரதமர் மோடியுடன் விளையாட்டு குறித்த கலந்துரையாடல்” என்ற நாடு தழுவிய இளைஞர் பங்கேற்பு நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 27 அன்று நடைபெறவுள்ளது. நாட்டின் 1,500-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் இளம் விளையாட்டு வீரர்களுடன் உரையாட உள்ளார். அடித்தட்டு விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துதல், 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கான திறமைகளை அறிவியல் ரீதியாகக் கண்டறிதல், இளைஞர் தலைமைத்துவ ஆளுமையை மேம்படுத்துதல், எதிர்காலத் திறன் மேம்பாடு ஆகிய நான்கு முக்கியக் கருப்பொருள்களை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் அமையவுள்ளது.

ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எய்ம்ஸ் உள்ளிட்ட முன்னணிக் கல்வி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தீபா கர்மாகர், சாய்னா நேவால், ஸ்ரீஜேஷ், மேரி கோம், ககன் நாரங், பைசுங் பூட்டியா, மீராபாய் சானு, பி டி  உஷா போன்ற தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் இளைஞர்களுடன் தங்களின் விளையாட்டுப் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

மேலும், மத்திய, மாநில அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டு இளைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டறிய உள்ளனர். அத்துடன், வளர்ச்சியடைந்த இந்தியா  இளம் தலைவர்கள் விநாடி வினா போட்டியும்  நடைபெறவுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302702&reg=48&lang=2

****

SS/SE/SH


(रिलीज़ आईडी: 2302938) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Urdu , Marathi , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam