உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேற்குவங்க மலைப்பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

प्रविष्टि तिथि: 22 AUG 2026 4:15PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் மலைப்பகுதி சார்ந்த பல்வேறு தரப்புப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் சிலிகுரியில் இன்று நடைபெற்றது. மேற்குவங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ராஜு பிஸ்தா, திரு ஹர்ஷவர்தன் சிங்லா, மலைப்பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு விஷால் லாமா, ஜிஜேஎம் தலைவர் திரு பிமல் குருங், ஜிஎன்எல்எஃப் தலைவர் திரு மன் கிசிங், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு பரத் சேத்ரி, திரு சோனம் லாமா, திரு நோமன் ராய், சிபிஆர்எம் தலைவர் திரு ஜே.பி. ராய், கோரானிமோ தலைவர் திரு தாவா பக்ரின், சுமேதி தலைவர் திரு பிகாஷ் ராய் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மலைப்பகுதி மக்களின் அனைத்து விவகாரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தனித்துவ அடையாளம், நிரந்தர அரசியல் தீர்வு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறுதல் தொடர்பான அவர்களின் கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் விரைவில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.

மேலும், இச்சமூகத்தின் பிற கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்றும், நிலுவையில் உள்ள அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காண்பதற்கு ஏதுவாக மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். நிரந்தர அரசியல் தீர்வை நோக்கிய இறுதி ஒப்பந்த விவரங்களை இறுதி செய்வதற்கான வழிமுறைகளை வகுக்க, முன்னாள் துணைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் திரு பங்கஜ் குமார் சிங் தலைமையில் குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தின் நிறைவாக, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரி ஆகியோரின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302332&reg=3&lang=1

****

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302378) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Odia