சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துக் கலவைகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது

प्रविष्टि तिथि: 22 AUG 2026 9:47AM by PIB Chennai

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், குளோர்பெனிரமைன் மேலியேட்,  ஃபினைல்ஃப்ரின் ஹைட்ரோகுளோரைடு ஆகியவற்றை உள்ளடக்கிய மருந்துக் கலவைகளின் உற்பத்தி, விற்பனை,விநியோகம் ஆகியவற்றின் மீது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்த மருந்துகளை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்ற தெளிவான எச்சரிக்கையை, அதன் பேக்கிங் மீது இடம்பெறச் செய்யவும் கட்டாயப்படுத்தியுள்ளது.

முன்னதாக, 15 ஏப்ரல் 2025 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம், இதே வயது வரம்பு சார்ந்த எச்சரிக்கையுடன் குறிப்பிட்ட சில மருந்துக் கலவைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. தற்போதைய அறிவிக்கை, இந்த இரண்டு மூலப்பொருட்களையும் கொண்ட அனைத்து மருந்து வகைகளுக்கும் இந்தக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறது.

மருத்துவ நிபுணர் குழு, மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய மருந்துக் கலவைகளின் பயன்பாடு நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்றும், பாதுகாப்பான மாற்று மருந்துகள் இருப்பதாகவும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

மருந்துத் தயாரிப்பாளர்கள், இந்த மருந்துகளின் முத்திரை, பேக்கேஜ் இன்செர்ட், மருந்துடன் வழங்கப்படும், தகவல், விளம்பர குறிப்புகளில், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்துக் கலவையைப் பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது சுகாதார நலன் கருதி, மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் பிரிவு 26எ-ன் கீழ், இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காட்டுப்பாடுகள் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2302237&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2302335) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam