எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத் திருத்தம் கனிமங்களின் பாதுகாப்பு, உள்நாட்டில் இரும்புத் தாது கிடைப்பதை உறுதிசெய்யும்: இந்திய எஃகு ஆணையம்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 3:49PM by PIB Chennai

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026, நாட்டின் கனிமத் துறையில் நிலையான நிதி நடைமுறை, நீண்டகால கொள்கை உறுதியை ஏற்படுத்தும் முக்கியமான சீர்திருத்தம் என்று இந்திய எஃகு ஆணையம்  இச்சட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தத் திருத்தம் கனிமங்களுக்கான வரி, கட்டணங்களில் தெளிவையும், சீரான தன்மையையும் ஏற்படுத்துகிறது. நிலுவையில் உள்ள முந்தைய காலத்திற்கான கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுவதால், சுரங்கத் தொழிலுக்குக் கூடுதல் உறுதியும் நம்பிக்கையும் கிடைக்கும்.

குறிப்பிடத்தக்க அளவில் சொந்த இரும்புத் தாது, நிலக்கரி சுரங்கங்களைக் கொண்டுள்ள செயில் நிறுவனத்திற்கு, இச்சீர்திருத்தம் சுரங்க நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்தி, முதலீடு, சுரங்கங்களின் மேம்பாட்டை ஊக்குவித்து, நீண்டகால மூலப்பொருள் பாதுகாப்பை வலுப்படுத்தும். மேலும், செயில் நிறுவனத்தின் கனிம வளங்களைத் திறம்படப் பயன்படுத்தவும், இரும்புத் தாது உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.

இச்சீர்திருத்தம் உள்நாட்டுச் சந்தையில் இரும்புத் தாது கிடைப்பதை அதிகரிக்க உதவும். சொந்த சுரங்கங்களின் செயல்திறன், மேம்பாடு அதிகரிப்பதன் மூலம், நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, கூடுதல் இரும்புத் தாதுவை சந்தையில் விற்பனைக்கு செயில் நிறுவனம் வழங்க முடியும்.

இந்தச் சீர்திருத்தம் அதிக முதலீடு, உற்பத்தியை ஊக்குவித்து, இறக்குமதி சார்பைக் குறைத்து, கனிமங்கள், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தி, கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களின் போட்டித்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301519&reg=3&lang=1

****

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2301746) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Telugu , Kannada