குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கடினமானத் தருணங்களில் கூட அறநெறியுடன் செயல்படும் திறனின் அடிப்படையிலேயே தலைமைத்துவம் மதிப்பிடப்படுகிறது-குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 2:28PM by PIB Chennai
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளில் இரண்டாம் கட்டப் பயிற்சியின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார்.
தங்களுடையப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர் குடிமைப் பணிகள் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளதாகவும் அடிப்படை நிலையில் கொள்கைக்கும் அதன் செயல்பாட்டுக்கும் இடையே முக்கிய இணைப்பாகத் திகழ்கின்றது என்று கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்பதை நோக்கிய பயணம் குறித்து சி பி ராதாகிருஷ்ணன், வளர்ச்சியின் பயன் கடைகோடி பகுதிகளைச் சென்றடைவதையும் அது அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். சேவை மனப்பான்மை, கடமை உணர்வு என்பதைத் தங்களுடைய வழிகாட்டும் மந்திரமாகக் கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
ஒருங்கிணைந்த அணிகளை உருவாக்குதல், சக பணியாளர்களை ஊக்குவித்தல், தங்களுக்கு முன்பு இருந்தவர்கள் உருவாக்கிய சிறந்த நடைமுறைகளை முன்னெடுத்துச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
குடிமைப்பணிகளில் மகளிரின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் குறித்துக் குறிப்பிட்ட திரு சி பி ராதாகிருஷ்ணன், 2024-ம் ஆண்டு பிரிவில் சுமார் 41 சதவீதம் பேர் மகளிர் என்பதைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்ளுதல், சூழ்நிலைக்கேற்ப மாறும் குணம், எதிர்காலத்திற்கு தயார்நிலையில் இருத்தல் ஆகியவற்றின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நடத்தையும், நேர்மையும் பொதுச்சேவையின் அடித்தளங்கள் என்று வலியுறுத்திய திரு சி பி ராதாகிருஷ்ணன், உண்மையான தலைமைத்துவம் என்பது அதிகாரத்தாலோ அல்லது நிலையினாலோ மதிப்பிடப்படுவதில்லை என்றும் கடினமானத் தருணங்களில் கூட அறநெறியுடன் செயல்படும் திறனே அவ்வாறு மதிப்பிடப்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301498®=3&lang=1
***
SS/IR/SM/SH
(रिलीज़ आईडी: 2301701)
आगंतुक पटल : 9