நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அங்கீகாரம் பெறப் பரிசோதனை மையங்கள் விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 வரை சமர்ப்பிக்கலாம்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 12:24PM by PIB Chennai

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோக அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறை, சட்ட அளவியல் (அரசு அங்கீகாரம் பெற்ற மையங்கள்) விதிகள் 2013-ன் கீழ் அங்கீகாரம் பெற்றப் பரிசோதனை மையங்களாக்குவதற்கு தகுதியுடைய தொழிற்சாலைகள், ஆய்வகங்கள், பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பப் பயிற்சி நிலையங்கள், ஐடிஐ-க்கள் ஆகியோரிடமிருந்து இணையவழி மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தற்போது இதற்கான இணையதளம் செயல்பாட்டில் உள்ளதால் தகுதியுடைய நிறுவனங்கள் தங்களுடைய விண்ணப்பங்களை emaap.gov.in/gatc என்ற இணையப்பக்கம் மூலம் 2026 ஆகஸ்ட் 31 மாலை 5-மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. இதில் விண்ணப்பங்கள் சமர்பித்தல், கட்டணம் செலுத்துதல், விண்ணப்பங்களின் நிலையை அறிதல், விண்ணப்பதாரர்களுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகியவற்றுக்கு முழுமையான டிஜிட்டல் செயல்முறை உள்ளது.

வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட எடைகள், அளவுகளை சரிபார்த்தல், மறுசரிபார்த்தல் ஆகியவற்றில் தொழில்நுட்பத் திறன்மிக்க தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்பதைச் சாத்தியமாக்குவதன் மூலம் நாட்டின் சரிபார்த்தல் துறையை விரிவுபடுத்துவதை அரசு அங்கீகாரம் பெற்றப் பரிசோதனை மையங்கள் முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது வரை, 51 பரிசோதனை மையங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301442&reg=3&lang=1

***

SS/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2301646) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Kannada