சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்திற்கான இணையதளம், சமாவேஷ் இணையதளத்துடன் ஒருங்கிணைப்பு

प्रविष्टि तिथि: 19 AUG 2026 5:09PM by PIB Chennai

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்திற்கான இணையதளம், தேசிய மின்னணு ஆளுமைப் பிரிவால் உருவாக்கப்பட்டுள்ள சமாவேஷ் இணையதளத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்திற்கான இணையதளத்தை, தேசிய மின்னணு ஆளுமைப் பிரிவின் சமாவேஷ் தளத்துடன் (https://www.dosje.gov.in/organisation/nasha-mukt-bharat-abhiyaan/) இணைக்கும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த இணையதளத்தை தற்போது புதிய இணைப்புகள் மற்றும் கியூஆர் குறியீடுகள் மூலம் அணுக முடியும் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (போதைப்பொருள் தடுப்புப் பிரிவு) டாக்டர் சந்தீப் ஆர். ரத்தோடு தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கத்தின் இணையதளம், மின்னணு உறுதிமொழி மற்றும் மித்ர் பதிவு ஆகிய நடவடிக்கைகளுக்குப் புதிய இணைய இணைப்புகளைப் பயன்படுத்துமாறு தொடர்புடைய அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் சார்ந்த எதிர்காலப் பயன்பாடுகள் அனைத்தும் புதிய சமாவேஷ் இணையதளம் வாயிலாகவே நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அனைத்துத் தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், அதிகாரப்பூர்வத் தொடர்புகள், இணையதளங்கள், தகவல், கல்வி மற்றும் தொடர்பு சாதனங்கள் அல்லது பிற ஆவணங்களில் பழைய இணையதள முகவரி குறிப்பிடப்பட்டிருந்தால், அவை உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301232&reg=3&lang=1

(Release ID: 2301232)

****

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2301360) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu