எரிசக்தி அமைச்சகம்
இந்தியா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் இளையோர் எரிசக்தி உச்சிமாநாடு
प्रविष्टि तिथि:
19 AUG 2026 2:35PM by PIB Chennai
இந்தியா தலைமையில், எட்டாவது பிரிக்ஸ் இளையோர் எரிசக்தி உச்சிமாநாடு 2026 ஆகஸ்ட் 17 அன்று இணையவழியில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் கல்வித்துறை, அரசு நிறுவனங்கள், எரிசக்தி அமைச்சகங்களைச் சேர்ந்த இளம் வல்லுநர்கள் உட்பட, 100-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இளையோர் எரிசக்தி முகமையின் பிரதிநிதிகள், சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை உள்ளிட்ட உலகளவிலான அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்றனர்.
2026-ம் ஆண்டில், இந்தியாவின் தலைமையில், மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மைக்கானக் கட்டமைப்பு என்ற கருப்பொருளுடன் இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த உச்சிமாநாட்டில், இளைஞர்களை மையமாகக் கொண்ட எரிசக்தி ஒத்துழைப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. புத்தாக்கம், தொழில்முனைவு, தொழில்நுட்ப முன்னேற்றம், சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் உந்துசக்தியாகத் திகழும் இளையோரின் பங்களிப்பை இந்த உச்சி மாநாடு அங்கீகரித்தது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள இளம் தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், அரசு நிறுவனங்கள், தொழில்துறையினரிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த மாநாடு வலியுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301116®=3&lang=1
****
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2301335)
आगंतुक पटल : 12