இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
விநாடி-வினா போட்டியுடன் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2027 போட்டி தொடங்கியது
प्रविष्टि तिथि:
19 AUG 2026 4:39PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா விநாடி-வினா போட்டித் தொடக்கத்துடன் வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் 2027 தொடங்கியது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளையோர் புதுதில்லியில் பிரதமரைச் சந்தித்து தங்கள் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்புப் பெறுவார்கள்.
அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளம் தலைவர்கள் உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறமைமிக்க இளைஞர்களுக்கு பொது வாழ்வில் ஈடுபடவும், தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், நாட்டைக் கட்டமைக்கும் பணியில் பங்கேற்கவும் இத்திட்டம் வாய்ப்பளிக்கிறது. வெளிப்படையான, தகுதியின் அடிப்படையில் பல்வேறு நிலைகளைக் கொண்ட நடைமுறைகளின் மூலம் பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் விநாடி-வினா போட்டியிலிருந்து கட்டுரைப் போட்டி மாவட்ட அளவிலான போட்டிகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அளவிலான போட்டிகளுக்குப் பின் தேசிய அளவிலான வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் உரையாடல் போட்டியை அடைகின்றனர்.
இதில் முதல் நிலையிலான வளர்ச்சியடைந்த இந்தியா விநாடி-வினா போட்டி மை பாரத் இணையதளத்தில் 2026 ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 30 வரை நடத்தப்படுகிறது. 15 வயது முதல் 29 வயதுடைய இந்திய இளைஞர்களுக்கான இந்த விநாடி-வினா போட்டி பல்வேறு மொழிகளில் டிஜிட்டல் முறைகளில் நடத்தப்படும். இப்போட்டியில் பங்கேற்றவர்களில் முதன்மையான 10 சதவீதம் பேர் அடுத்த நிலையிலான வளர்ச்சியடைந்த இந்தியா கட்டுரைப் போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் மை பாரத் இணையதளம் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியா தொடர்பான தலைப்பில் 500 சொற்களுடன் கூடிய கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2301197®=3&lang=1
****
SS/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2301328)
आगंतुक पटल : 12