பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வீடுகளுக்கான குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளை ஊக்குவிக்கும் ஊக்கத்தொகைத் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

प्रविष्टि तिथि: 18 AUG 2026 9:13PM by PIB Chennai

நாடு முழுவதும் வீடுகளுக்குத் தூய்மையான, பாதுகாப்பான, குறைந்த விலையில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, வீடுகளுக்குக் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் வழங்குவதை ஊக்குவிக்கும் ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டம், தற்போது நடைமுறையில் உள்ள குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கையை விரைவாக அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1.74 கோடி வீடுகளில் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகள் உள்ளன. கட்டணம் செலுத்தப்படாமல் உள்ள இணைப்புகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும், புதிய பகுதிகளுக்குக் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், நகர்ப்புறங்களில் எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு இத்திட்டம் நேரடி ஊக்கத்தொகையை வழங்குகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் எரிபொருட்களுக்கு மாற்றாகப் பாதுகாப்பான, தூய்மையான, வசதியானதாகக் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு அமைகிறது. இது குறைந்த அழுத்தத்தில் நிலத்தடிக் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுவதால், எரிவாயு சிலிண்டர்களைக் கையாள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறைகின்றன. சிலிண்டர்களை முன்பதிவு செய்தல், சேமித்தல், மாற்றுதல் ஆகிய தேவைகள் இல்லாமல், வீடுகளுக்குத் தொடர்ந்து எரிவாயு கிடைக்கிறது. பயன்படுத்திய அளவுக்கு மட்டுமே கட்டணம் செலுத்துவதால் செலவினத்தையும் கட்டுப்படுத்த முடியும். குறைந்த மாசுபாட்டை வெளியிடுவதால், வீட்டுக்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துவதுடன், கார்பன் உமிழ்வையும் குறைக்கிறது.

குழாய் மூலமான இயற்கை எரிவாயு விரிவாக்கத்தை விரைவுபடுத்த, விரைவான ஒப்புதல் நடைமுறை, தரப்படுத்தப்பட்ட வழித்தட உரிமைக் கட்டணங்கள், இயற்கை எரிவாயுவுக்கான மதிப்பு கூட்டு வரியை 5 சதவீதமாகக் குறைக்க மாநிலங்களுக்கு ஊக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. எல்பிஜி சிலிண்டர்களை ஒப்படைப்பதற்கான இணையதளம், வீடுகளுக்கு அறிவிப்புகள், விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் தேசியக் குழாய்வழி இயற்கை எரிவாயு இயக்கம் 2.0 மூலம் செயல்படுத்தப்படுகின்றன. புதிய இணைப்புகளுக்கு விண்ணப்பித்து கண்காணிப்பதை எளிதாக்க ஒருங்கிணைந்த இணையதளமும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனால் வீட்டுக் குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்புகளுக்கான முதலீட்டுத் தொகையைத் திரும்பப் பெறும் காலம் சுமார் 10 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையிலான குடும்பங்களுக்குத் தூய்மையான, பாதுகாப்பான, மலிவு விலையில் குழாய் மூலம் சமையல் எரிவாயு கிடைப்பது மேலும் விரைவுபடுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301012&reg=3&lang=1

***

SS/PD/KR


(रिलीज़ आईडी: 2301056) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam