விவசாயத்துறை அமைச்சகம்
வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேளாண் வளர்ச்சி அவசியம்-மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2026 5:20PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் செளகான் தலைமையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண் வளர்ச்சியின்றி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகாது என்று தெரிவித்தார். நாடு வெறும் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, வேளாண் நிலம் முதல் உலகளாவிய சந்தை வரை வலுவான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு நேரடிப் பயன்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சி சூழல் தேவை என்றும் அவர் கூறினார்.
வேளாண் மாற்றத்தின் அடுத்தக் கட்டமாக விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதிலும் குறு, சிறு விவசாயிகளின் எதிர்கொள்ளும் சக்தியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், தரமான விதைகள், நடவுப் பொருள்களை உரிய நேரத்தில் பெறுதல், சமச்சீரான உரப் பயன்பாடு, மேம்பட்ட மண்வளம், நீடித்த வேளாண் நடைமுறைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300879®=3&lang=1
***
SS/IR/SM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2300979)
வருகையாளர் எண்ணிக்கை : 62