நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதிச் சேவைகள் துறை சார்பாக பொதுத்துறை வங்கிகள் மாநாடு 2026 தொடங்கியது

प्रविष्टि तिथि: 17 AUG 2026 5:08PM by PIB Chennai

நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை சார்பாக பொதுத்துறை வங்கிகள் மாநாடு 2026 என்ற இரண்டு நாள் நிகழ்வு இன்று தொடங்கியது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், பொதுத்துறை வங்கிகள், பொது நிதி நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள்,  துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வங்கி மற்றும் நிதித் துறையில் உருவாகி வரும் வாய்ப்புகள், முக்கியமான உத்திகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

 

பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கான முக்கிய வாய்ப்புகள் உள்ள துறைகளை உள்ளடக்கிய ஏழு கருப்பொருள்களை மையமாகக் கொண்டு இந்த மாநாடு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் கலந்துரையாடல்கள், நிறுவனங்கள் முழுவதும் முன்னெடுத்துச் செல்லப்பட்டு விரிவுபடுத்தப்படக்கூடிய நடைமுறை உத்திகளையும் தீர்வுகளையும் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

 

விழாவில் பேசிய அமைச்சர், வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மிகக் குறைந்த அளவில்  வாராக் கடன்கள் பதிவாகியிருப்பது, சீர்திருத்தங்களின் அடுத்த கட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வங்கித் துறைக்கு ஒரு வலுவான நிலையை அளிப்பதாகக் கூறினார். இளைஞர்களுக்கான வங்கிச் சேவைகள் குறித்துப் பேசிய அவர், இந்தியாவின் மக்கள் தொகையில் 29% பேர் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவில் இருப்பதால், வங்கித்துறையின் எதிர்காலம் இந்திய இளைஞர்களின் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிப்பதாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300508&reg=3&lang=1

****

SS/BR/SH


(रिलीज़ आईडी: 2300671) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Kannada