விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியின் ஏழு அம்சங்கள் குறித்த உறுதிமொழியை மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் ஆகஸ்ட் 18 அன்று ஏற்க வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 AUG 2026 3:22PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின உரையில் குறிப்பிட்ட வளர்ச்சியின் ஏழு அம்சங்கள் என்ற அடிப்படையில், மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் புதுதில்லியில் புசா வளாகத்தில் ஆகஸ்ட் 18 அன்று இரு அமைச்சக அதிகாரிகளுக்கு உறுதிமொழி ஏற்கச் செய்ய உள்ளார்.

இத்திட்டம் பல்வேறு துறைகளின் செயல்திட்டங்கள், லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தின் விரிவாக்கம், விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகத்தினரின் நலனில் முக்கிய முடிவுகளில் கவனம் செலுத்தும். இத்திட்டத்தில் முற்போக்கு விவசாயிகள், லட்சாதிபதி சகோதரிகள் திட்டப் பயனாளிகள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், உணவு பதனப்படுத்துவோர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டிய வளர்ச்சியின் ஏழு அம்சங்கள், வேளாண், கிராமப்புற இந்தியாவிற்கு முக்கிய வழிகாட்டுதலை அளிப்பதாக திரு சௌகான் கூறினார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், வெளிப்படையான கண்காணிப்பு, பயன்மிக்க அமலாக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தத் தொலைநோக்குப் பார்வையை செயல்பாடாக மாற்ற அரசு முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

விவசாயிகளும், கிராமப்புற பெண்களும் நேரடியாக பயன்பெறுவதையும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தங்களுடைய முயற்சிகள் பங்களிப்பதை உறுதி செய்வதே நமது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300417&reg=3&lang=1

***

SS/IR/LDN/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2300602) வருகையாளர் எண்ணிக்கை : 69
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Kannada , Malayalam