பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கட்டமைப்பில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிறது - சுதந்திர தின உரையில் பிரதமர்

प्रविष्टि तिथि: 15 AUG 2026 4:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்களின் பங்கை எடுத்துரைத்ததோடு, நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்தியப் பெண்களின் சாதனைகளைப் பிரதமர் எடுத்துரைத்ததோடு, பெண்கள் இப்போது பல்வேறு துறைகளில் தங்களது நிலையை வலுப்படுத்தி வருவதாகவும் கூறினார்.

கிராமப்புறப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டை எடுத்துரைத்த பிரதமர், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டதாகக் கூறினார். தற்போது மேலும் 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்குவது, கிராமப்புறப் பொருளாதாரத்தில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதமர் எடுத்துரைத்ததோடு, இந்தியாவின் மகள்கள் தங்களது சாதனைகள் மூலம் புதிய சகாப்தத்தை உருவாக்கி வருவதாகவும் கூறினார். சட்டப்பேரவைகளிலும்  மக்களவையிலும் பெண்களுக்கு 33 சதவீதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300092&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300210) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी