மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இணையப் பாதுகாப்பு குறித்து, சைபர் குஸ்தி 2026 என்ற போட்டியை நடத்துகிறது நீலிட் நிறுவனம்
प्रविष्टि तिथि:
16 AUG 2026 12:17PM by PIB Chennai
மத்திய அரசின் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப நிறுவனமான நீலிட், இணையப் பாதுகாப்பு மதிப்பீட்டில் மனிதர்களின் முடிவெடுக்கும் திறனைச் சோதித்து அங்கீகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட தேசிய இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு ஹேக்கத்தானான 'சைபர் குஸ்தி 2026' போட்டியை 2026 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கியுள்ளது.
இந்த ஹேக்கத்தான் நீலிட்-ன் தலைமை இயக்குநரும், நீலிட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான பேராசிரியர் எம் எம் திரிபாதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் போட்டியானது, கணினி அவசர பதில் நடவடிக்கை குழுவான சிஇஆர்டி-யை அறிவுசார் கூட்டாளராகக் கொண்டு, தேசியப் பாதுகாப்புத் தரவுத்தளத்தின் கீழ் தகவல் பகிர்வுப் பகுப்பாய்வு மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.
சைபர் குஸ்தி 2026-க்கான பதிவு ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10, 2026 வரை நடைபெறும். இதில் பங்கேற்க கட்டணம் இல்லை. மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் மூன்று பேர் கொண்ட குழுக்களாகப் பங்கேற்கலாம்.
வழக்கமான இணையப் பாதுகாப்புப் போட்டிகளைப் போலல்லாமல், இணையப் பாதுகாப்பு முடிவுகளை மதிப்பீடு செய்யவும், முன்னுரிமை அளிக்கவும், பாதுகாக்கவும் பங்கேற்பாளர்களின் திறனைச் சோதிக்கும் வகையில் சைபர் குஸ்தி 2026 வடிவமைக்கப்பட்டுள்ளது.
சைபர் குஸ்தி 2026 மூன்று தொடர் சுற்றுகளாக நடத்தப்படும்:
முதல் சுற்று : 15 செப்டம்பர் 2026 அன்று நடைபெறும் இணையவழிச் சுற்று நடைபெறும். இதில் இருந்து 50 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரண்டாம் சுற்று –: 24 செப்டம்பர் 2026 அன்று நடைபெறும் இணையவழிச் சுற்றிலிருந்து 10 இறுதி அணிகள் தேர்ந்தெடுக்கப்படும்.
இறுதிச் சுற்று : இது 2026 அக்டோபர் 9 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேரில் நடைபெறும்.
வெற்றி பெறும் அணிக்கு “சைபர் கேசரி 2026” என்ற பட்டமும் , பாரம்பரிய கேடயமும் வழங்கப்படும். இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு “ருஸ்தம்”, “பஹல்வான்” என்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300120®=48&lang=1
****
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2300161)
आगंतुक पटल : 8