உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பு - சுதந்திர தின உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி

प्रविष्टि तिथि: 15 AUG 2026 9:58PM by PIB Chennai

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து ஆற்றிய உரையில் பிரதமர் திரு நரேந்திர மோடி, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவது நம் அனைவரின் பொறுப்பு என்று கூறினார். ஆயுதம் ஏந்திய நக்சலைட்டுகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர் என்றாலும், நக்சல் மனப்பான்மை இன்னும் நீடிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நக்சல் மனப்பான்மையை நாம் அடையாளம் கண்டு, அத்தகைய சக்திகளைத் தனிமைப்படுத்தி, நாட்டின் இளம் தலைமுறையை வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பிரதான நீரோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையில், நக்சலிசமும் மாவோயிசமும் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டன என்று தெரிவித்தார். நாற்பது ஆண்டுகளாக, நக்சலிசம் நாட்டின் பெரும் பகுதிகளையும் அதன் மக்கள்தொகையின் ஒரு பெரும் பிரிவையும் துப்பாக்கி அச்சுறுத்தலின் கீழ் தன் பிடியில் வைத்திருந்தது என்று அவர் கூறினார். சாதாரண மக்களைப் பாதுகாக்கும் முயற்சியில், நமது 3,500-க்கும் மேற்பட்ட காவல்துறை, பாதுகாப்புப் படையினர் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர் என்று அவர் தெரிவித்தார்.

 ஒரு காலத்தில் நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில், இப்போது வளர்ச்சி, நம்பிக்கை, முயற்சி ஆகியவற்றின் மூவண்ணக் கொடி உயரமாகப் பறக்கிறது எனவும் அவை நக்சல் இல்லாதவையாக மாறியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். வரவிருக்கும் நாட்களில், நாம் ஒரு வலிமையான பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவோம் என்று பிரதமர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக்  காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2300050&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(रिलीज़ आईडी: 2300151) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी