தேசிய மனித உரிமைகள் ஆணையம்
19 மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
प्रविष्टि तिथि:
14 AUG 2026 12:45PM by PIB Chennai
2026 ஜனவரி முதல் மே 22 வரையிலான ஐந்து மாதங்களில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 19 வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. 2025-ம் ஆண்டில் அதிகபட்சமாக 59 வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக அப்படையின் அதிகாரப்பூர்வத் தரவுகளை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர், மத்திய ரிசர்வ் காவல் படை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 281 வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், இதில் சுமார் 216 பேர் பணியில் இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299326®=48&lang=2
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2299553)
आगंतुक पटल : 8