பிரதமர் அலுவலகம்
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதல் வீரர் ரிஷிகன்தா சிங் சனம்பாம் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 JUL 2026 8:49PM by PIB Chennai
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்திய பளுதூக்குதல் வீரர் ரிஷிகன்தா சிங் சனம்பாம் வெள்ளிப்பதக்கம் வென்றது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அவருடைய உறுதிப்பாடும், சிறந்த செயல்பாடும் நாட்டிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து, புதிய சாதனைகளைப் படைத்து, பல இளைய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டு அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்திருப்பதாவது:
“இந்திய பளுதூக்குதல் வீரர் ரிஷிகன்தா சிங் சனம்பாம் தனது சிறந்த பங்களிப்புடன் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகவும் பெருமிதம் அடையச்செய்கிறது. அவருடைய உறுதிப்பாடும், சிறந்த செயல்பாடும் நாட்டிற்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அவர் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைத்து பல இளைய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கட்டும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்!”
***
(Release ID: 2289698)
SS/IR/PS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2298994)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam