உள்துறை அமைச்சகம்
நூலகங்களை ஒன்றிணைப்பதற்கான ‘கிராமின் ஞான் சேது’ செயலியைத் தொடங்கி வைத்தார், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா
प्रविष्टि तिथि:
12 AUG 2026 8:48PM by PIB Chennai
குஜராத்தின் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள நூலகங்களை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'கிராமின் ஞான் சேது' (Gramin Gyan Setu) செயலியை, மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
தேசிய நூலக தினமான இன்று இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். குழந்தைகளிடையே புத்தக வாசிப்பு மற்றும் கற்றலை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிக்கு அருகிலும் முக்கியமான இடத்திலும் ஒரு நூலகத்தை அமைப்பதே இதன் நோக்கம் என்று திரு ஷா குறிப்பிட்டார். கல்வி கற்பதில் ஆர்வமுள்ள குழந்தைகளுக்காக, அவர்களுக்கு எதிர்காலத்தில் பயனளிக்கும் வகையில் மொத்தம் 2.80 லட்சம் புத்தகங்களைக் கொண்ட நான்கு நூலகங்கள் இந்தக் கிராமப்புற நூலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போது 752 நூலகங்கள் ‘கிராமின் ஞான சேது’ செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எந்தவொரு பாடத்திலும் தேர்ச்சி பெறுவது ஒருபுறம் இருக்க, முறையான படிப்பு இல்லாமல் அடிப்படை அறிவைக் கூடப் பெற முடியாது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298635®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2298704)
आगंतुक पटल : 7