ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘ரயில்ஒன்’ செயலியில் தினமும் சராசரியாக 10 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு செய்து சாதனை

प्रविष्टि तिथि: 12 AUG 2026 4:58PM by PIB Chennai

முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் பயணிகள் எளிதாகப் பெறுவதற்காக, இந்திய ரயில்வே சார்பில் கடந்த 2025 ஜூலை 1 அன்று ‘ரயில்ஒன்’ என்ற அதிநவீன மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

 

தற்போது இந்தச் செயலி 4.76 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை எட்டியுள்ளதுடன், தினமும் சராசரியாக 10 லட்சம் டிக்கெட்டுகள் இதன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 

முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லா சாதாரண டிக்கெட்டுகள், நடைமேடை டிக்கெட், ரயில் இயக்கம் குறித்த தகவல்கள், பி.என்.ஆர்  நிலை அறியும் வசதி மற்றும் 'ரயில் மதாத்'  புகார்கள் சேவை எனப் பயணிகள் பயன்படுத்தும் அனைத்து வசதிகளையும் இந்த ஒரே செயலியில் ஒருங்கிணைத்து இந்திய ரயில்வே வழங்கியுள்ளது.

 

 இத்தகவலை  ரயில்வே,  தகவல் ஒலிபரப்பு மற்றும் மின்னணு-தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298355&reg=3&lang=1

 

செய்தி அடையாள எண் 2298355

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2298678) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Kannada