தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு முன்முயற்சியின் முதல் கட்டத்தில் நான்கு தொகுப்புகளையும் 552 பேர் நிறைவு செய்துள்ளனர்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 2:10PM by PIB Chennai

தேசிய செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டு முன்முயற்சியின் முதல் கட்டத்தில் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பதிவு செய்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 60,253 ஆகும்.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு தொகுப்புகளை 4620 பேர் நிறைவு செய்துள்ளனர்.  அனைத்து நான்கு தொகுப்புகளையும் 552 பேர் நிறைவு செய்துள்ளனர்.

இத்திட்டத்தின் முதல் கட்டம் 33 மணி நேரங்களைக் கொண்ட நான்கு தொகுப்புகளை உள்ளடக்கயதாகும்.  இவை, இரண்டு கற்றல் தளங்கள் மூலம் அளிக்கப்படுகிறது.

பாடத்திட்டம், தொகுப்புகள், பயிற்சி காலம் உள்ளிட்ட இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியப் படைப்பு தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐசிடி), தனியார் துறையினர் இணைந்து இப்பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.  கூட்டுச் சான்றிதழ் வழங்கும் நோக்கில் மேம்பட்ட திறன் பயிற்சி தொகுப்பை இந்திய படைப்பு தொழில்நுட்ப நிறுவனம் நடத்துகிறது.

இத்தகவலை, தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298148&reg=3&lang=1

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2298557) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam