கலாசாரத்துறை அமைச்சகம்
தில்லியில் இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இருசக்கர வாகனப் பேரணியைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 AUG 2026 2:38PM by PIB Chennai
தேசியப் பாடலான வந்தே மாதரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட 'ஹர் கர் திரங்கா 2026' (இல்லந்தோறும் மூவண்ணக்கொடி) இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியைக் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடையும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் இப்பேரணி நடைபெறுவது பெருமைக்குரியது என கூறினார். பங்கிம் சந்திர சட்டோபாத்யாயவால் இயற்றப்பட்ட வந்தே மாதரத்தின் வார்த்தைகள், இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாட்டுமக்களின் இதயங்களில் தேசபக்தியை தீவிரமாக ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார். 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்காக அனைவரும் 'இல்லந்தோறும் மூவண்ணக்கொடி' இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட வீரர்கள், சிறப்பு இருசக்கர வாகனக் குழுவினர் இப்பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 9 முதல் 17 வரை அனைத்துக் குடிமக்களும் தங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298167®=3&lang=1
***
SS/SE/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2298516)
வருகையாளர் எண்ணிக்கை : 42