பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பான் ஓபன் 2026 பட்டத்தை வென்ற பி வி சிந்துவுக்குப் பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 19 JUL 2026 7:13PM by PIB Chennai

ஜப்பான் ஓபன் 2026 பட்டத்தை வென்று, இந்தச் சாதனையைப் படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி வி சிந்துவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் போட்டித் தொடர் முழுவதும் பி வி சிந்துவின் மனவுறுதியும் அபாரத் திறமையும் முழுமையாக வெளிப்பட்டதாகக் குறிப்பிட்ட பிரதமர், நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க அவர் உத்வேகமாகத் திகழ்வார் என்றும் கூறினார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டதாவது:

இந்திய பேட்மிண்டன் விளையாட்டுக்கு ஒரு வரலாற்றுச் சாதனை!

ஜப்பான் ஓபன் 2026 போட்டியில் வெற்றி பெற்ற பி வி சிந்துவுக்கு வாழ்த்துகள். இந்தப் போட்டி முழுவதும் அவரது உறுதியும், சிறப்பான திறமையும் வெளிப்பட்டன. இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் அவர் என்பது இந்தச் சாதனையை மேலும் சிறப்பானதாக்குகிறது. இது, நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களை விளையாடவும், சிறந்து விளங்கவும் ஊக்கமளிக்கும்.

***

(Release ID: 2286349)

SS/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2297080) வருகையாளர் எண்ணிக்கை : 20