பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாட்டு மக்கள் அனைவரும் இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தில் பங்கேற்க பிரதமர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 7:20PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, 'ஹர் கர் திரங்கா' எனப்படும் இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பங்களிப்பிற்கான தங்களின் கூட்டு உறுதியைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மூவண்ணக் கொடியானது இந்தியாவின் பெருமைக்குரிய சின்னம் என்றும், தேசத்திற்காகத் தங்களால் இயன்றதைச் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் அது ஒரு நிலையான உத்வேகத்தின் ஊற்று என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

நாடு வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், இந்த ஆண்டுக்கான இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கம், வந்தே மாதரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது குறித்து திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நமது மூவண்ணக் கொடியானது நமது பெருமையாகவும், தேசத்திற்காக எப்போதும் சிறந்த பங்களிப்பை வழங்க நமக்கு தொடர்ச்சியான உத்வேகத்தை வழங்குவதாவும் விளங்குகிறது.

இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தில் நாம் ஆர்வத்துடன் பங்கேற்று, வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைப்பதற்குப் பங்களிப்பதற்கான நமது கூட்டு உறுதியைப் புதுப்பிப்போம். இந்த ஆண்டு இந்த முயற்சிகள் வந்தே மாதரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதும், அதுவும் நாம் அதன் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில் அமைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது."

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296904) வருகையாளர் எண்ணிக்கை : 53