உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புக்கெட்டிலிருந்து தில்லிக்கு வந்த விமானம் திடீரென உயரம் குறைந்து இறங்கியதில் சில பயணிகள் காயம் - விசாரணைக்கு உத்தரவு

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2026 5:07PM by PIB Chennai

04.08.2026 அன்று, புக்கெட்டிலிருந்து தில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று, சீராகப் பறந்துகொண்டிருந்தபோது திடீரென சுமார் 300 அடி உயர இழப்பைச் சந்தித்து உயரம் குறைந்து இறங்கியது. அதனைத் தொடர்ந்து, விமானம் நிலைபெற்று பின்னர் தில்லியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

இந்த நிகழ்வின் போது, விமானத்தில் இருந்த சில பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில், மூன்று பச்சிளங்குழந்தைகள் உட்பட 137 பயணிகளும், இரண்டு விமானிகளும் ஆறு விமானப் பணியாளர்களும் பயணம் செய்தனர்.

இதுபோன்ற ஒரு நிகழ்வைத் தொடர்ந்து, நிலையான இயக்க நடைமுறைகளின் ஒரு பகுதியாக, விமானப் பணியாளர்கள் இருவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட மனோவியல் பொருள் கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட சோதனையில், மறு உறுதி செய்யும் சோதனை நடத்தப்பட வேண்டிய தேவை கண்டறியப்பட்டது. அதன்படி, மாதிரிகள் உறுதிப்படுத்தும் பகுப்பாய்விற்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இறுதி அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிகழ்வு ஒரு தீவிரமான சம்பவமாக வகைப்படுத்தப்பட்டு, விமான விபத்து விசாரணை அலுவலகத்தால் (ஏஏஐபி - AAIB) விசாரிக்கப்பட்டு வருகிறது.

விசாரணையும் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகளும் நிறைவடையும் வரை, இரண்டு விமானிகளும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் பணிப்பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும், விமானப் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரநிலைகளைப் பேணுவதில் உறுதியாக உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296835&reg=48&lang=1

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296901) வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , हिन्दी , Manipuri , Gujarati , English , Marathi , Bengali , Telugu