மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் 13-வது கூட்டம்

प्रविष्टि तिथि: 07 AUG 2026 5:03PM by PIB Chennai

பிரிக்ஸ் நாடுகளுடனான ஒத்துழைப்பில் மக்களை மையமாகக் கொண்ட மற்றும் மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில் இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டை மத்திய கல்வி அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி இன்று மீண்டும் வலியுறுத்தினார். ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற பிரிக்ஸ் கல்வி அமைச்சர்களின் 13-வது  கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டதிதில் '13-வது பிரிக்ஸ் கல்வி அமைச்சர்கள் பிரகடனம்' ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கவுள்ள நிலையில், "மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான கட்டமைப்பு" என்ற கருப்பொருளைக் குறிப்பிட்ட அமைச்சர், கல்வி அமைப்புகள் மனித விழுமியங்களில் உறுதியாக நிலைத்திருந்து அதேவேளையில் வளர்ந்து வரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப இளைஞர்களைத் தயார்படுத்த வேண்டும் என்று கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296094&reg=3&lang=1

****

TV/BR/SH


(रिलीज़ आईडी: 2296397) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Kannada , Malayalam , English , Urdu , Odia