தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மது மற்றும் புகையிலை தொடர்பான உள்ளடக்கங்கள் வகைப்படுத்தப்படுவதை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கட்டாயமாக்குகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 3:24PM by PIB Chennai

டிஜிட்டல் ஊடகங்களில் செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை வெளியிடுபவர்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான ஒரு நிறுவன ரீதியான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் 'தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள்) விதிகள், 2021'-ஐ அரசு 25.02.2021 அன்று அறிவித்துள்ளது.

இதன் மூன்றாம் பகுதி, டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கான நெறிமுறைகளை வகுக்கிறது.

ஓடிடி தளங்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் ஒலிபரப்பக்கூடாது என்றும், தகுந்த எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் இந்த நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன. மேலும், கருப்பொருள்கள் மற்றும் செய்திகள், வன்முறை, பாலினம், மொழிநடை, போதைப்பொருள் மற்றும் பயமுறுத்தும் வகையிலான ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளடக்கம் வகைப்படுத்தப்பட வேண்டும்.  

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன்  அட்டவணையில் உள்ள பகுதி II, 'மனநலத்தைப் பாதிக்கும் பொருட்கள், மது, புகைபிடித்தல் மற்றும் புகையிலை’ ஆகியவை தொடர்பான உள்ளடக்கம் உட்பட, பல்வேறு வகையான உள்ளடக்கங்களை வகைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வரையறுக்கிறது.

நெறிமுறைகளை மீறுவது தொடர்பான புகார்கள், மூன்று அடுக்கு குறைதீர்ப்பு பொறிமுறையின் விதிகளின் கீழ் கையாளப்படுகின்றன.  மேலும், அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்  புகார்கள், 'தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021'-இன்படி சம்பந்தப்பட்ட ஓடிடி தளங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295969&reg=3&lang=1

***

 

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2296272) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam