பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் வளமான கைத்தறிப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் தேசிய கைத்தறித் தினத்தைக் கொண்டாடுமாறு மக்களுக்குப் பிரதமர் அழைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 06 AUG 2026 10:28PM by PIB Chennai

இந்தியாவின் வளமான, பலதரப்பட்ட கைத்தறிப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறித் தினத்தைக் கொண்டாடுமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

"உங்களுக்குப் பிடித்தமான கைத்தறிப் பொருட்கள் மற்றும் ஆடைகளை அணிந்து தயாராகும் காணொலிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்" என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நாளை, ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறித் தினமாகும். இந்தியாவின் கைத்தறிப் பன்முகத்தன்மையை நாம் மக்களிடையே பிரபலப்படுத்துவோம்.

உங்களுக்குப் பிடித்தமான கைத்தறிப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை அணிந்து தயாராகும் (GRWM) காணொலிகளைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#NationalHandloomDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த மறவாதீர்கள்."

***

(Release ID: 2295824)

VJ/SE/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2295909) வருகையாளர் எண்ணிக்கை : 39