ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆயுர்வேத மருத்துவத்திற்கான எதிர்காலம் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புத்தாக்கம் போன்றவற்றில் அமைந்துள்ளது: மத்திய அமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ்

प्रविष्टि तिथि: 06 AUG 2026 5:07PM by PIB Chennai

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலின் நிர்வாகக் குழுவின் 27-வது கூட்டம், மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு. பிரதாப்ராவ் ஜாதவ் தலைமையில், புதுதில்லியில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், புனேவில் உள்ள ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுமம், பிராந்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் விலங்கு பராமரிப்பு மையத்தையும், ரானிக்கேட்டில் உள்ள அதன் பணியாளர் குடியிருப்பு வளாகத்தையும் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

மேலும் நாக்பூரில் உள்ள பிராந்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜையையும் அவர் மேற்கொண்டார். இந்தியாவின் உள்ளூர் சுகாதார மரபுகள், பாரம்பரிய மருத்துவ முறைகள்,  கால்நடை மருத்துவ அறிவு ஆகியவற்றை முறையாக ஆவணப்படுத்துதல், மதிப்பீடு செய்தல், அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கான முக்கிய முன்முயற்சிகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

முதுகலை ஆயுர்வேத ஆராய்ச்சி, புத்தாக்கம், அறிவியல் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில், தேசிய ஆராய்ச்சி அங்கீகார இணையதளத்தை திரு. பிரதாப்ராவ் ஜாதவ் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிர்வாகக் குழுவிடம் உரையாற்றிய திரு. பிரதாப்ராவ் ஜாதவ், இந்தியாவின் வளமான பாரம்பரிய அறிவு அமைப்புகளுடன், அறிவியல் பூர்வமான உறுதிப்படுத்தல், புத்தாக்கம், உலகளவிலான அணுகுமுறை ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய குழுமம் முக்கிய பங்காற்றியுள்ளதை அவர் விரிவாக எடுத்துரைத்தார். ஆயுர்வேத மருத்துவத்தை அறிவியல் ரீதியாக வலுவானதாகவும், உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துமாறு நிறுவனத்தை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295568&reg=3&lang=1      

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2295757) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati