பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு டெட் சரண்தாஸ், பிரமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 11:00PM by PIB Chennai

நெட்ஃபிளிக்ஸ் இணை தலைமைச் செயல் அதிகாரி திரு டெட் சரண்தாஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அப்போது பேசிய திரு மோடி இந்தியா வளமான கதை சொல்லல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாகவும், சிறந்தப் படைப்புத்திறன் உள்ளவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைப் படைப்பாக்கத்திற்கான உலகளாவிய மையமாக நமது நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

திரு டெட் சரண்தாஸைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தியாவின் ஊடகம், பொழுதுபோக்குத் துறையின் பெரும் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம்.

இந்தியா வளமான கதை சொல்லல் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, சிறந்தப் படைப்புத்திறன் உள்ளவர்கள் இருக்கின்றனர். இதைப் படைப்பாக்கத்திற்கான உலகளாவிய மையமாக நமது நாட்டின் நிலையை வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

***

(Release ID: 2295291)

TV/IR/SM/SH


(रिलीज़ आईडी: 2295595) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Malayalam