தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகையாளர்களின் நலன்களை பல்வேறு முன்முயற்சிகள் மூலம் அரசு உறுதி செய்கிறது – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 05 AUG 2026 5:00PM by PIB Chennai

மரணம், நிரந்தர ஊனம், தீவிர நோய்கள், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் போன்ற சூழல்களால் ஏற்படும் கடும் நெருக்கடியின்போது பத்திரிகையாளர்கள், ஊடக பணியாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அவசரகால அடிப்படையில் ஒருமுறை அளிக்கப்படும் நிதியுதவியை வழங்குவதற்காக பத்திரிகையாளர் நலத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  பத்திரிகை தகவல் அலுவலகம், மாநில, யூனியன் பிரதேச அரசுகளால் அங்கீகரிகப்பட்ட பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி அங்கீகாரம் பெறாத பத்திரிகையாளர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

இத்திட்டத்தின் மூலம் 2014-15-ம் ஆண்டு முதல் 2025-26-ம் ஆண்டு வரையிலான காலத்தில் 456 பத்திரிகையாளர்கள், ஊடக பணியாளர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர்களுக்கு ரூ.19.41 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.  பத்திரிகை தகவல் அலுவலகத்தில் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் சுகாதாரத் திட்ட வசதிகளை பயன்படுத்தலாம். இதில், அரசு மருத்துவமனைகள் அல்லது மத்திய அரசு சுகாதார திட்டங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மத்திய அரசின் சுகாதார திட்டங்களின் கட்டண விகிதத்தில் சிகிச்சை பெறலாம்.  தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகை தகவல் அலுவலகம் அங்கீகாரம் அளிக்கிறது.  தற்போதைய நிலவரப்படி, பத்திரிகை தகவல் அலுவலகத்தில் 1,786 பத்திரிகையாளர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

இத்தகவலை, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

 

(Release ID: 2294940)

****

TV/IR/SU/SH


(रिलीज़ आईडी: 2295202) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada